Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வாளரான பிரேமானந்த உதலாகம பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸை நீதவான் மொஹமட் சஹாப்தீன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கம் மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல சந்தேக நபருக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

சந்தேகநபர், இராணுவ முகாம்களுக்கு செல்வதற்கும் எந்தவொரு இராணுவ புலனாய்வு சேவை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் நீதிபதி தடைவிதித்துள்ளார்.

0 Responses to லசந்த கொலை சந்தேகநபர் பிணையில் விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com