இந்தியாவிடமிருந்து 500 மெகாவோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.
இதன்பிரகாரம், கடலுக்கு அடியிலான மின்வட (கேபிள்) திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மின்சார விநியோகத்தை வழங்க, இந்தியா தயாராக இருப்பதாக அந்நாட்டு மின்சக்தி அமைச்சின் செயலாளர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு மின்சாரத் தேவையை ஈடுசெய்யும் முகமாக, 500 மெகாவோட் மின்சாரத்தை இந்தியாவிடம் இலங்கை கோரியிருந்தது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மின்சார இணைப்பு வசதிகள் இல்லாமையால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது துணை - கடல் சக்தி இணைப்பு தொழிநுட்பத்தை பயன்படுத்துவது குறித்து, இந்திய மின்சக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

0 Responses to 500 மெகாவோட் மின்சாரத்தை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்ய இலங்கை தீர்மானம்!