Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒன்றிணைக்கப்பட்ட நாட்டினை மீளவும் துண்டாடுவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க கூடாது. ஒன்றிணைக்கப்பட்ட இலங்கையை மீண்டும் பிரித்து நாட்டை சீரழிக்க முற்படுகின்றனர்.

நாட்டில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்த மிகவும் பயங்கரமான கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தேன். மிககுறுகிய காலத்தினுள் நாட்டை அபிவிருத்தி செய்தேன். எனது அபிவிருத்தியைப் பார்த்து ஆச்சரியமைடைந்தனர். ஆனால் இன்றுள்ள நிலைமையை பாருங்கள்.

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு மக்களின் ஆணையைக் கோருவதற்காக தேர்தலை நடாத்துவோம் என்றவர்கள் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இது மக்களுக்கு இவர்கள் செய்யும் பெரிய அநியாயமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to ஒன்றிணைக்கப்பட்ட நாட்டை மீண்டும் துண்டாட முயற்சி: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com