Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலையோடு தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கருகில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள்  இறந்தார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று  மாலை  இச்சம்பவம் தொடர்பாக 5 பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஐந்து பொலிஸாரும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று சனிக்கிழமை காலை ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.  இதன்போது ஐவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற  நீதவான் சதீஸ்கரன்  உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸாரையும் யாழ்ப்பாண சிறைச்சாலை பாதுகாப்பற்றதென பொலிஸார் தெரிவித்தநிலையில், அவர்களை அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும் எதிர்வரும் 24ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை; சந்தேகநபர்களுக்கு நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com