Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் மரணம், படுகொலைகளாக கருதப்பட வேண்டியதற்கான சாட்சியங்கள் கிடைத்து வருவதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“பொலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரை துரத்தி பிடிக்கவே, பொலிஸாருக்கு அதி நவீன 1000சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. காவலரணில் நிற்காமல் வேகமாக போனவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துக்கொண்டு போனதாக தகவல் இல்லை. இந்நிலையில் ஏன் சுட வேண்டும் என தெரியவில்லை. ஆகவே அவர்களை துரத்தி சென்று வழிமறித்து பிடிக்க வேண்டும். அப்படியே சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதலில் ஆகாயத்தை நோக்கியும், பின்னர் முழந்தாளுக்கு கீழேயும் சுட வேண்டும் என்ற விதிகள்  மூன்றாம் வகுப்பு குழந்தைக்கும் தெரியும். இவை பயிற்சி பெற்ற இந்த பொலிஸாருக்கு தெரியவில்லையா” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தனது அமைச்சின் “அரசசேவை உங்களுக்காக” என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மனோ கணேசன் மேற்க்ணடவாறு குறிப்பிடடுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சில வாரங்களுக்கு முன் மலையகத்தில் புசல்லாவையில் ஒரு இளைஞர் பொலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்தார்.  இப்போது  யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 

நம் நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. சபையின் சிறுபான்மை விவகார அறிக்கையாளர் ரீடா ஐஷக் இங்கே இருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் இன்னமும் நிலைமை கேவலமாக இருந்து இருக்கும்.

எங்களுக்கு இராணுவம் வேண்டாம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் சிவில் பொலிஸ் எங்கள் நண்பர்கள் என்று இன்று சொல்ல தொடங்கி இருக்கும் யாழ்ப்பாணத்து மக்களை மீண்டும் பொலிஸ் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கும் சம்பவங்கள் இவை.  பொலிஸ் துறை தொடர்பில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த, குற்றம் இளைத்தோர் மீது கடும் நடவடிக்கைகள்  சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் படுகொலைகளாக கருதப்படுவதற்கான சாட்சியங்கள் உண்டு: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com