கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட பலர் அநுராதபுரம் இரகசிய சித்திரவதை முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காணாமற்போனோரைச் தேடிக் கண்டறியும் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சித்திரவதை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குறித்த சங்கத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனோரின் உறவினர்கள் மற்றும் காணாமற்போனோரின் உரிமைகளுக்காக போராடிவரும் பொது அமைப்புக்கள் இணைந்து நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது உறவுகளை கடத்திய படை அதிகாரிகளை ஆதாரத்துடன் அடையாளப்படுத்திய போதிலும் அவர்களுக்கு எதிராக அரசாங்கமும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்களும் தவறியுள்ள நிலையில், நாம் கேள்வியுற்ற இந்த இரகசிய முகாம் தொடர்பில் முறையிடுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. அதனாலேயே, குறித்த இரகசிய முகாம் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவலை வெளியிட முன்வந்தோம்.” என்றுள்ளார்.

0 Responses to காணாமற்போகச் செய்யப்பட்ட பலர் அநுராதபுரம் இரகசிய முகாமில் தடுத்து வைப்பு: காணாமற்போனோரைச் தேடிக் கண்டறியும் சங்கம்