Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2016 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இரு அமெரிக்க ஆய்வாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படும் என சுவீடனின் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் ஹார்ட் மற்றும் மசாசுசெட்ஸ் தொழிநுட்ப கல்லூரியின் ஆய்வாளர் பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம் ஆகிய இருவருமே இப்பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

இவ்விரு அறிஞர்களும் சேர்ந்து 'ஒப்பந்தக் கோட்பாடு' என்ற கொள்கையை உருவாக்கியதற்காகவே இந்த நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. அதாவது எதிரெதிர் இரட்டை நலன்கள் உடைய ஒப்பந்தங்களில் இருதரப்பும் பயனுள்ள விதத்தில் ஒப்பந்தங்களை வடிவமைப்பதற்கு இந்த ஒப்பந்த கோட்பாடு முக்கியமாக உதவுகின்றது. இதைவிட பொருளாதாரத் துறையில் இந்த ஒப்பந்தக் கோட்பாட்டின் பயன்கள் அளப்பரியது.

அதாவது ஒப்பந்த வடிவமைப்பில் உள்ள பல்வேறு சட்டகங்கள், சிக்கல்கள் ஆகியவற்றை ஒரு ஒட்டுமொத்த திட்ட வடிவமைப்பின் கீழ் கொண்டு வர இந்த ஆய்வு உதவுகின்றது. இன்றைய காலத்தில் அரசியல் சட்டங்கள் முதல் திவால் சட்டங்கள் வரை அனைத்துக்கும் ஓர் அடித்தளத்தை வழங்கி அவற்றைப் பயனுள்ளதாக்குகின்றது இந்த ஒப்பந்த கோட்பாடு என்றால் அது மிகையாகாது. இதேவேளை டிசம்பர் 10 ஆம் திகதி வழங்கப் படவுள்ள நோபல் பரிசுகளில் இதுவரை இலக்கியத்துக்கான நோபல் பரிசு மட்டுமே அறிவிக்கப் பட வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இரு அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com