2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் 2வது முழுமையான வரவு- செலவுத் திட்டமாகவும், சுதந்திர இலங்கையில் 70வது வரவு- செலவுத் திட்டமாகவும் இது அமையவுள்ளது.
வரவு- செலவுத் திட்ட உரையில் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் பற்றியும் அறிவிக்கப்படவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் வரவு- செலவுத் திட்ட விவாதம் 26 நாட்கள் நீடிக்க உள்ளதோடு டிசம்பர் 10ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடைபெற்று வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
நாளை முதல் 18ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற இருப்பதோடு அன்றைய தினம் வாக்கெடுப்பும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து குழு நிலை விவாதம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்கள் தவிர சகல தினங்களிலும் விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சகல மக்களதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுகின்ற நீண்ட கால வேலைத்திட்டத்துடன் கூடிய அபிவிருத்திக்கான வரவு- செலவுத் திட்ட யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இம்முறை வரவு- செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு கடந்த வரவு- செலவுத் திட்டத்தினைக் காட்டிலும் குறைவு என்று கூறப்படுகின்றது.

0 Responses to 2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று; கல்வி- சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு குறைப்பு!