நாட்டில் எந்தப் பகுதியிலும் புத்தர் சிலைகளை வைப்பதை யாராலும் தடுக்க முடியாது. புத்தர் சிலை வைப்பது நல்லாட்சியைப் பாதிக்குமென்று யாராவது கருதினால் அமைச்சுப் பதவியைக் கூட துறக்கத் தயாராக இருப்பதாக ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது மாணிக்கமடு புத்தர்சிலை விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்ற வேளையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தயா கமகே கூறியுள்ளதாவது, “ஜனாபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு அங்கரித்துள்ளனர். தீகவாப்பி விகாரைக்குச் சொந்தமான காணிகள் சுற்றிவர சுமார் 12000 ஏக்கரில் இருப்பதாக தீக்கவாப்பியின் வரலாறு பற்றிக் கூறும் புராதன நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அவதானிக்கின்ற போது கல்முனை முதல் பொத்திவில் வரையுள்ள காணிகள் தீக்கவாப்பி விகாரைக்கே சொந்தமாகின்றன. அண்மையில் நான் பாகிஸ்தானுக்கு சென்ற போது அங்கு அதிகளவிலான புத்தர் சிலைகளைக் கண்டேன். இதனை பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம் மக்களே பாதுகாத்து வருகின்றனர். இந்த நாட்டில் புத்தர் சிலை ஒன்றை புதிதாக வைப்பதை யாராவது தடுப்பார்களானால் அது பிழையான விடயமாகும். புத்தர் சிலை வைப்பது நல்லாட்சியைப் பாதிக்குமென்று யாராவது கருதினால் எனது அமைச்சுப் பதவியைக் கூட விட்டுவிட நான் தயாராகவுள்ளேன். அது எனக்கு பெரியவிடயமல்ல.
சுமார் 135 விகாரைகள் அமைப்பதற்கு சீமெந்தினை வழங்கியுள்ளேன். ஆனால் மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம் பற்றி எனக்கு இது வரைக்கும் எதுவும் தெரியாது.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டில் எந்தப் பகுதியிலும் புத்தர் சிலைகளை வைப்பதை யாராலும் தடுக்க முடியாது: தயா கமகே