அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், உலக விடயங்களில் தலையிடாது உள்நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால் போதுமானது என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது, “டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்தது. முன்னர் பராக் ஒபாமா வெற்றி தொடர்பிலும் நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். ட்ரம்ப் எம்மைப் போலவே கொடிகட்டி வீதிகளில் பதாதைகளைப் போட்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் ஆவார். சாதாரண மக்களின் செல்வாக்கைப்பெற்று வெற்றிபெற்றார். அவர், உலக நாடுகளின் விடயங்களில் தலையிடாது தமது நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து அமெரிக்கா தொடர்பில் கவனம் செலுத்தினால் சிறந்தது.” என்றுள்ளார்.

0 Responses to டொனால்ட் ட்ரம்ப் உலக விடயங்களில் தலையிடாது உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்: இலங்கை