இரண்டாவது உலக மகா யுத்தத்தை வென்ற பிரித்தானியப் பிரதமர் வின்ஸன் ஷெர்ஸிலை தோற்கடித்தனர். அதுபோலவே, இலங்கையில் நீண்ட யுத்தத்தை வென்று கொடுத்த தன்னையும் தோற்கடித்தனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும், மக்கள் தற்போது உண்மையான நிலைமையை உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ராஜா பர்வீஸூக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கையில் நீண்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் பல வழிகளிலும் செய்த உதவியை நன்றியுடன் நினைவு கூருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 Responses to உலக மகா யுத்தத்தை வென்ற வின்ஸன் ஷெர்ஸிலை தோற்கடித்தது போல என்னையும் தோற்கடித்தனர்: மஹிந்த