உலக பொருளாதாரத்தில் ஆசிய பசுபிக் வலயமே அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், அதன் உச்ச பலனை பெற திட்டம் தீட்ட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங்கில் நடைபெறும் 15வது ஜெர்மன் வர்த்தகம் தொடர்பான ஆசிய, பசுபிக் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாடு ஜெர்மன் பிரதி சான்ஸ்லர் சிக்மா கெப்ரியாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலியா நிதி அமைச்சர், மதியால் கோமன், இந்துனேசிய வர்த்தக அமைச்சர் என்கரிஸ்டோ லுகிதா, ஹொங்கொங் வர்த்தக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயலாளர் கிரகரி சோ அடங்கலான பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.
மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் ஆரம்ப நிகழ்வு கிரேண்ட் ஹயட் ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போதே அரச தலைவர்கள் எதிர்கால பொருளாதார அபிவிருத்தியை எட்டுவதற்காக ஒத்துழைப்புடன் செயற்படும் பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தினர்.
ஆசிய பசுபிக் வலயம் உலகில் வேகமாக அபிவிருத்தியடைந்து வருவதால் இந்தப் பின்னணியில் வலய நாடுகளுக்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வாய்ப்பினூடாக உச்ச பலனை பெற்றுக்கொள்வதற்கு திட்டம் தயாரிக்க வேண்டும் எனவும் அரச தலைவர்கள் குறிப்பிட்டனர்.
தனிதனி நாடுகளாகவும் வலயம் என்ற வருகையிலும் முகம்கொடுக்கும் சவால்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் ஆராயப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளினதும் எதிர்கால பொருளாதார திட்டம் பற்றியும் இங்கு கருத்துப்பரிமாறப்படுவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to உலக பொருளாதாரத்தில் ஆசிய பசுபிக் வலயம் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது: ரணில்