இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையில் தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தியாவில் நடைபெறவுள்ள பேச்சுக்களில் கலந்து கொள்ளச் செல்லும் இலங்கையின் அமைச்சர்கள் மட்டக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இடம்பெற்றுள்ளார்.
இதனை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று சனிக்கிழமை புதுடில்லி செல்லும் அமைச்சர்கள் மட்டக்குழுவில் எம்.ஏ. சுமந்திரனும் இடம்பெற்றுள்ளார். இலங்கை தரப்புக் குழுவின் ஒரு உறுப்பினராக அவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களிலும் பங்கேற்பார் என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
இழுவைப்படகு மீன்பிடி முறையைத் தடை செய்யும் தனிநபர் பிரேரணை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.




0 Responses to மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்த இந்தியா செல்லும் இலங்கைக் குழுவில் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடம்!