அரையாண்டு தேர்வுகள் நெருங்க உள்ளதால் உள்ளாட்சி தேர்தலை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்க அதிமுக முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இடைத்தேர்தல் பணிகளில் ஆளும் கட்சியான அதிமுக மும்முரமாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த விசயங்களிலும் கவனம் செலுத்துக்கின்றது. உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்தபோதிலும், டிசம்பர் 31க்குள் அத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்தது. இந்த சூழலில், உள்ளாட்சி தேர்தல் விஷயத்தையும் கையிலெடுத்து ஆராய்ந்துவரும் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை மேலும் 2 மாதங்கள் தள்ளிப்போகவைப்பது குறித்தும் விவாதம் நடத்தியிருக்கிறது.
தமிழக அரசின் ஊரக வளர்ர்ச்சித்துறை அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். என்ன காரணங்களைச் சொல்லி தேர்தலை மேலும் 2 மாதங்கள் தள்ளிவைக்கக்கோருவது என்கிற விவாதங்கள் பேசப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்பரில் தேர்தல் நடத்துவதாயின் அதிகபட்சம் டிசம்பர் 1ம் தேதிக்குள் நோட்டிஃபிகேசன் வெளியிடப்பட வேண்டும். நவம்பர் 19ல் இடைத்தேர்தல் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளிப்படையான ஆலோசனைகளை நடத்தும்.
உள்ளாட்சியில் வார்டுகளை சுழற்சி மற்றும் இடஒதுக்கீடு வகையில் மாற்றியமைத்தல் உள்ளிட்டவைகளை சரி செய்த பிறகே நடத்த முடியும். ஏனெனில் உள்ளாட்சி குறித்து திமுக போட்ட வழக்கே அதுதான். ஆனால், இதனை சரிசெய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும், டிசம்பர் மாதம் 23 தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடத்தபப்டும். அதனால் அந்த சமயத்தில் தேர்தல்பணிகளுக்காக ஆசிரியர்களை பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கும்.
இப்படிப்பட்ட ஆலோசனைகள் அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களை முன்னிறுத்தி தேர்தலை தள்ளிவைக்க ஆளும் தரப்பில் திட்டமிடப்படுகிறது.

0 Responses to உள்ளாட்சி தேர்தலை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்க அதிமுக முயற்சி?