சென்னை ஆவடியில் உள்ள குப்பை கிடங்கில் குவியல் குவியலாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் கொட்டப்பட்டு இருந்ததை பொதுமக்கள் அள்ளிக்கொண்டு சென்றனர்.
ஆவடியில் ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் குவியலாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் என ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொட்டப்பட்டு கிடந்துள்ளன.காலையில் அவ்வழியாக சென்றவர்கள், அதனைக் கண்டு இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பின்னர் ஆவடியைச் சுற்றியுள்ள அம்பேத்கார் நகர், கரிமேடு, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணத்தை அள்ளிச்சென்றனர்.இது குறித்து பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராணுவத்துறைக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு கிடந்ததால், ராணுவ உயரதிகாரிகள்தான் அங்கு பணத்தை கொட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

0 Responses to சென்னையில் குவியல் குவியலாக ரூபாய் நோட்டுகள்: அள்ளிச் சென்ற பொது மக்கள்!