Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் போலீஸ் காவலில் 600 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில், கடந்த 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரை, போலீஸ் காவலில் 600 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கைதிகள் மரணம் தொடர்பாக போலீசார் யாரும் தண்டிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. 

காவல் மரணங்கள் தொடர்பாக காரணம் கூறும் காவல் துறையினர், கைதிகளின் உடல்நலக்குறைவு, தப்ப முயற்சி, தற்கொலை மற்றும் விபத்து ஆகிய காரணங்களைத்தான் வழக்கமாகக் கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால், காவலில் துன்புறுத்தல் காரணமாகவே அதுபோன்ற மரணங்கள் நிகழ்வதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. 

தவறிழைக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது நடத்தப்படும் விசாரணையில் அவர்களைப் பொறுப்பாக்குவது அரிதான விடயம் என்றும், அவ்வாறு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக புகார் செய்யப்படுவதை தாமதப்படுத்துவதிலோ அல்லது தடுப்பதிலோதான் கவனம் செலுத்துவதாக மனித உரிமை அமைப்பு கூறுகிறது.

0 Responses to இந்தியாவில் போலீஸ் காவலில் 600 பேர் உயிரிழந்துள்ளனர்: ஆய்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com