இஸ்லாமிய தேசப் போராளிகளான ISIS சுமார் ஒரு வருடப் போராட்டத்துக்குப் பிறகு சிரியாவின் மத்தியிலுள்ள பண்டைப் பெருமை மிக்க நகரான பால்மைராவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
இது சிரிய இராணுவத்துக்கும் சர்வதேசத்துக்கும் முக்கிய ஒரு பின்னடைவு என சிரிய அரசு அறிவித்துள்ளது. மேலும் ISIS இன் இந்த முன்னேற்றம் வடக்கே உள்ள அலெப்போவின் கிழக்கு பகுதியை சிரிய ரஷ்யப் படைகள் கைப்பற்றி நிகழ்த்தி வரும் பாரிய முற்றுகைப் போரை எதிர்கொள்வதற்கான புதிய உத்வேகத்தை அளித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
சிரியாவின் மத்தியில் பால்மைரா அமைந்திருப்பதால் அது பிராந்திய முக்கியத்துவம் மிக்க ஒரு பகுதி என்பது மட்டுமன்றி அங்கு 2000 வருடங்கள் பழமையான கலாச்சார முக்கியத்துவம் மிக்க கட்டடங்களும் குறியீடுகளும் காணப் படுகின்றன. மேலும் ஆரம்பம் முதற்கொண்டே சிரிய போரில் இரு தரப்புக்கும் இந்த பால்மைரா நகரம் மிக முக்கியமான இலக்காகத் திகழ்ந்து வருகின்றது. முன்னதாக ISIS வசம் பால்மைரா இருந்த போது அங்கிருந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்களும் ஆலயங்களும் அவர்களால் அழிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. இதேவேளை பால்மைரா நகரின் வீழ்ச்சிக்கு அமெரிக்கா தலைமயிலான கூட்டணி நாடுகளின் கவனக் குறைவும் போர் அணுகு முறையுமே காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

0 Responses to அலெப்போ தாக்குதலை எதிர்கொள்ளும் அதேவேளை சிரியாவின் பால்மைரா நகரை மீளக் கைப்பற்றியது ISIS