Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் யோகாவை செய்தால் எந்த மதமும் தள்ளிவைக்காது என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

வருகிற 21ம் திகதி நடைப்பெற இருக்கும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா சிறப்புப் பயிற்சிகளை பல ஆயிரம் மக்களுக்கு தந்து வரும் பாபா ராம்தேவ், மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும் யோகாவை செய்வதால் எந்த மதமும் உங்களைத் தள்ளி வைக்காது என்றும், அப்படி தள்ளி வைக்கும் மதம் பலவீனமடைந்து உள்ளது என்றும் பொருள் என்று கூறியுள்ளார்.

அதோடு, விரிவான கண்ணோட்டத்துடன் அனைத்தையும் பார்க்கும்போது எதிலும் தங்களது இஷ்ட தெய்வத்தைக் காணலாம் என்றும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார். யோகாவில் ஒரு பயிற்சியான சூரிய நமஸ்காரம் சூரியனை வழிபாடு செய்யும் யோகா, என்றும், இது இந்துக்களுக்கு உரித்தானது என்றும் சர்ச்சை கிளம்பியதும், இஸ்லாமிய தலைமை ஹாஜி, சூரிய நமஸ்காரம் ஒரு உடற்பயிற்சியே என்பதால் இஸ்லாமியர்களும் யோகா செய்யலாம் என்று அனுமதி அளித்து உள்ளதும் குறிப்பிடத் தக்கது. இதையடுத்து ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்களும் யோகா பயிற்சியில் பங்கேற்று வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் யோகாவை செய்தால் எந்த மதமும் தள்ளிவைக்காது: ராம்தேவ்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com