மதுபாவனை மூலம் அதிக வருமானத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் மாகாணமாக வடக்கு மாகாணமே முன்னிலையில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவத்தின் பின்னர் இதுபற்றி பலரும் முக்கிய கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகள் மதுபாவனை விடயத்தில் செல்வாக்கு செலுத்துவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மனிதப் பண்புள்ள சமூகமொன்றை உருவாக்குவதற்கான பொறுப்பு தமக்கிருப்பதாகவும் கூறியுள்ளார்.
பாடசாலை மாணவர்களை போதைப்பொருளில் இருந்து காப்பாற்றுவதற்கான விரிவான தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலி ரிச்மண்ட் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மதுபாவனை மூலம் வடக்கிலிருந்தே அதிக வருமானம்: ஜனாதிபதி