Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு பெய்து வருவதாகவும் இதனால் ஏற்பட்ட குளிரைத் தாக்குப் பிடிக்க முடியாது 27 குழந்தைகள் பலியானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வீட்டை விட்டே வெளியே வரத் தயங்கி வரும் மக்கள் தற்போது கடும் குளிருக்கும் பனிப்பொழிவால் ஏற்பட்டுள்ள இடையூறுக்கும் ஆளாகியுள்ளனர். வீடுகளைச் சுற்றிலும் 50cm இற்கும் அதிகமான உயரத்துக்குப் பனி குவிந்திருப்பதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி மக்கள் அவதிப் படுவதுடன் இதனால் வயதானவர்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப் படுவதாகவும் தெரிய வருகின்றது.

தார்ஜாப் மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களுக்கு மைனஸில் வெப்பநிலை உள்ளதுடன் பலர் வீடுகளுக்கு உள்ளே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தான் குளிரைத் தாங்க முடியாது 27 குழந்தைகள் பலியாகி உள்ளனர். போக்குவரத்து மோசமாகத் தடைப் பட்டிருப்பதால் சுகாதார மையங்களுக்கோ மருத்துவ மனைகளுக்கோ மக்கள் செல்ல முடியாத நிலை காணப் படுகின்றது. குடிநீர் உறைந்து வருவதாலும் தெருக்களைத் தாண்டி கடைகளுக்குச் செல்ல முடியாததாலும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் அவசர கால அடிப்படையில் பொது மக்களுக்கு அரசு உதவ வேண்டிய சூழ்நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com