தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பின்பற்றி கர்நாடகாவில் கம்பலாவிற்கும் போராட்டம் வலுத்து வருகிறது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வெடித்த நிலையில் கர்நாடகாவில் கம்பலாவிற்கு ஆதரவாக குரல்கள் எழும்பின. இந்த நிலையில் பாரம்பரியமாக கம்பலா நடைபெறம் மங்களூர் பகுதியில் இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கன்னட பாரம்பரியத்தை காக்க கம்பலாவிற்கு மீண்டும் அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் கம்பலா தடைக்கு காரணமான பீட்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கம்பலா ஆதரவு போராட்டங்களால் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா, கம்பலாவிற்கு அரசு ஆதரவாக இருப்பதாகவும், பீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருப்பதால் நடத்த முடியாத சூழலில் இருப்பதாக கூறியுள்ளார். தேவைப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

0 Responses to கம்பலா போட்டிக்கான தடையை நீக்கக் கோரி கர்நாடகவில் மாணவர்கள் போராட்டம்!