Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் மனுதாரர் கூறுகையில், பசுவதைக்கு தடை உள்ள மாநிலங்களில் இருந்து மாடுகள், கால்நடைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு தடை செய்யப்படாத மாநிலங்களில் வைத்து கொல்லப்படுகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என கூறினார்.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மாடுகளை கடத்துவதற்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டியதோடு, அனைத்து மாநிலங்களையும், பசுவதைக்கு எதிராக சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட  முடியாது என தெரிவித்து, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

0 Responses to அனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரிய வழக்கு தள்ளுபடி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com