இலங்கை அரசாங்கம் அனைத்து மக்களினதும் உரிமைகளையும் பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை நியாயமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்களுக்காக தான் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்து பேசியிருந்தார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் இதயங்களின் காயங்களை ஆற்றுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியிருப்பது முக்கியமான விடயம் என்றும் சையிட் அல் ஹூசைன் கூறியுள்ளார்.

0 Responses to அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்; ரணிலுடனான சந்திப்பில் சையிட் அல் ஹூசைன்!