Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால், தவிர்க்க முடியாத சூழல் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெளிக்கிழமை இடம்பெற்ற மறைந்த சபாநாயகர் எச்.எம்.மொஹமட்டின் அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என எச்.எம்.மொஹமட் தீவிரமாக நம்பியிருந்ததுடன், சகல இனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நியாயமான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும் என அவர் விரும்பியிருந்தார்.

எனினும், அன்று அவருடன் நெருக்கமாகவிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, நேர்மையாக நடந்துகொள்ளாது தீர்வொன்றை வழங்காது அவருடைய எதிர்பார்ப்புக்களை உடைத்திருந்தனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது கடினம் என்பதை பின்னாளில் அவர் கூறியிருந்தார். இது கவலைக்குரிய விடயம். இந்த நிலைமை இன்னமும் தொடர்கிறது.” என்றுள்ளார்.

0 Responses to வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால், விளைவுகள் மோசமாகும்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com