புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு திணைக்களத்தின் வன்னி பிரிவு பணிப்பாளர் எம்.ஏ.ஆர்.ஹெமிடன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வினைப் பூர்த்தி செய்த மூவர் நேற்று வெள்ளிக்கிழமை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே புனர்வாழ்வு திணைக்களத்தின் வன்னி பிரிவு பணிப்பாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற நிலையில் விடுதலையான முன்னாள் போராளிகள் அவர்களின் தேவையின் நிமித்தம் வெளிநாடு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் மேற்கொள்ளத் தயாராக உள்ளது. புனர்வாழ்வின் பின் வெளியேறியவர்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்குதற்கு நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதற்காகவே சுயதொழில் முயற்சிக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்ல அனுமதி!