ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான முருகனின் மனைவி நளினி, 6 மாதம் பரோல் கேட்டு வேலூர் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம மனு அளித்துள்ளார்.
தனது மகளின் திருமணத்திற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு மனு அளித்துள்ளதாக நளினி-முருகன் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
நளினி மற்றும் முருகனை சிறையில் தனித்தனியாக சந்தித்த பின்னர் வழக்கறிஞர் புகழேந்தி கூறியதாவது,
நளினி மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதம் பரோல் கேட்டு சிறைத்துறை தலைவருக்கு நளினி கடந்த மாதம் 23-ந் திகதி மனு அனுப்பி இருந்தார்.
நளினியின் மனு சிறைத்துறை தலைவரிடம் நிலுவையில் உள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். நளினி இதுவரை 3 முறை மட்டுமே பரோல் கேட்டு விடுப்பில் சென்றுள்ளார்.இறுதிக்கட்ட விசாரணை தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆதரவாக வரும் பட்சத்தில் நளினி விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
இல்லாவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது விதியை பின்பற்றி நளினியை தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

0 Responses to மகளின் திருமணத்திற்காக ஆறு மாதம் பரோல் கேட்கும் நளினி