அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அடுத்த கட்டப் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியதொரு விடயம் முன்வைக்கப்படுமானால் அதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றக் கட்டட தொகுதியில் நேற்று புதன்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பிரத்தியேகச் சந்திப்பொன்றில் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து நாட்டினது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதற்கு பிரதமர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அத்தோடு, 13வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அரசாங்கம் சிந்திக்கவேண்டும். இனியும் காலம் தாழ்த்தாது இத்தீர்வுத்திட்ட நடைமுறைகளை செயற்படுத்த அரசாங்கம் முன்வருமானால், அதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி எப்போதும் துணைநிற்கும்”என்றுள்ளார்.

0 Responses to 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து தீர்வுக்கான பயணத்தினை ஆரம்பிக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா