Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அல்லாது புளோரிடா மாநிலத்தில் உள்ள மார் அலாகோ என்ற சொகுசு விடுதியில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேற்று வெள்ளிக்கிழமை அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

மேலும் இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும்  100 நாள் செயற்திட்டம் கைச்சாத்திடப் பட்டுள்ளது. இச்சந்திப்புக் குறித்து  வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலில் இரு நாட்டு நிர்வாகங்களுக்கும் இடையிலான தொடர் பரிவர்த்தனைகள் குறித்துப் பேசப் பட்டதாகவும் முக்கியமாக இராஜதந்திர உறவு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, சட்டம், சைபர் கிரைம் மற்றும் சமூக கலாச்சாரத் தொடர்புகள் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் ஏனைய மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான 100 நாள் செயற்திட்டமும் கைச்சாத்திடப் பட்டுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்தனர்.

0 Responses to அமெரிக்காவில் டிரம்பை முதன் முறை சந்தித்தார் சீன அதிபர் ஜீ ஜின்பிங்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com