இலங்கையுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும், இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று சீன அரசாங்கத்தின் அரசியல் ஆலோசனை சபையின் தேசியக் குழுத் தலைவர் யூ.சென்ஷேன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கௌரவம் மற்றும் சுயாதீனத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சீனா கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
60 ஆண்டு சீன- இலங்கை உறவுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் மிகவும் வலுவாக முன்னோக்கி கொண்டு செல்ல சீனா தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள சீன அரசாங்கத்தின் அரசியல் ஆலோசனை சபையின் தேசியக் குழுத் தலைவர் யூ.சென்ஷேன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்திய சந்தர்ப்பத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை வலுவான முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் உள்ளக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், சர்வதேச ரீதியிலும் சீனாவினால் வழங்கப்படுகின்ற ஒத்துழைப்புக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும் அரசியலமைப்புக்கு உட்பட்டே இருக்கும்: சீனா