Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனோர் தனிப்பணியகம் தொடர்பிலான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி முடிவே எடுப்பார் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் தனிப்பணியகத்தை உருவாக்கும் சட்டம் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினர் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தனர். இதனால், குறித்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இடையூறு ஏற்பட்டது.

இந்த நிலையில், குறித்த சட்டம் தொடர்பில் தமக்குள்ள ஆட்சேபனைகள் குறித்து 15 பக்கங்கள் அடங்கிய ஆவணத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும், அதற்கு விரைவில் பதில் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to காணாமற்போனோர் தனிப்பணியகத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி இறுதி முடிவு எடுப்பார்: கருணாசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com