2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மிக இளம் வயதில் பெற்றிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவர் புரட்சியாளரான மலாலா யூசுஃப்சாய் விரைவில் ஐ.நா சபையின் இளவயது அமைதிக்கான தூதுவராக நியமிக்கப் படவுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. இச்சந்தர்ப்பத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமையை இன்னமும் ஊக்குவிப்பதற்கான வாய்ப்புக்கள் அவருக்குக் கிடைக்கவுள்ளது.
ஏப்பிரல் 10 ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ள வைபவம் ஒன்றில் ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ரெஸ் இனால் 19 வயதே ஆகும் மலாலா யூசுஃப்சாய் கௌரவிக்கப் பட்டு குறித்த பதவி வழங்கப் படவுள்ளார். இது குறித்து இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்ட டெய்லி பாகிஸ்தான் பத்திரிகை குறித்த வைபவத்தின் போது மலாலா திரு குட்டெர்ரெஸ் மற்றும் உலகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொள்ளவுள்ள ஏனைய இளம் பிரதிநிதிகள் ஆகியோருடன் பெண் சிறுமிகளின் கல்வி உரிமை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பதவியை ஏற்றுக் கொள்வார் என்று தெரிவித்துள்ளது.
தான் மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளைச் சந்தித்த போதும் மிகவும் துணிச்சலுடன் பெண் சிறுமிகளின் கல்விக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் மலாலா யூசுஃப்சாய் என நேற்று வெள்ளிக்கிழமை அந்தோனியோ குட்டெர்ரெஸ் புகழாரம் சூட்டியிருந்தார். பாகிஸ்தானின் ஸ்வாட் வல்லேயில் 1997 இல் பிறந்த மலாலா 2012 ஆக்டோபர் 9 ஆம் திகதி பெண் சிறுமிகளின் கல்விக்குக் குரல் கொடுத்ததற்காகத் தலிபான்களால் தலையில் சுடப் பட்டார். இதை அடுத்து இலண்டன் கொண்டு செல்லப் பட்டு உயிர் பிழைத்த அவர் உலகளாவிய ரீதியில் கல்வி உரிமை மறுக்கப் பட்ட மில்லியன் கணக்கான பெண் சிறுமிகளுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியதால் சர்வதேச ஐகோனாக மாறினார்.
2013 ஆம் ஆண்டு தனது தந்தையுடன் இணைந்து மலாலா நிதியம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கித் தனது கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கினார். இதனால் அமைதிக்கான நோபல் பரிசை மாத்திரமன்றி உலகில் மிக இளம் வயதில் ஒரு நோபல் பரிசை வென்ற நபராகவும் மாறி பெரும் புகழ் பெற்றார்.
மலாலா எதிர்வரும் திங்கட்கிழமை ஐ.நா இன் இளம் அமைதித் தூதராக நியமிக்கப் படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஐ.நா சபையின் இளம் சமாதானத் தூதுவராகத் தேர்வாகவுள்ளார் மலாலா யூசுஃப்சாய்