Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இதுவரை 5000 ஏக்கர் காணிகள் வடக்கு கிழக்கில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போலன்றி தற்போதைய அரசாங்கம் யுத்தக் காலத்தில் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த வகையில் இதுவரை 5000 ஏக்கர் காணி மீள கையளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வவுனியா மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் மக்களின் சொந்தக் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதற்கு அமைச்சர்கள், கயந்த கருணாதிலக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் பதிலளித்தனர். இதன்போதே, மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to வடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இன்னும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com