இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போதே கூட்டமைப்பின் தலைவர்கள் மோடியிடம் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
குறுகிய சந்திப்பாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் மோடி, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளதாகவும், இவை தொடர்பில் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துரைத்ததாகவும், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்தோடு, வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் இந்தியா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

0 Responses to இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டித் தீர்வுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்; மோடியிடம் கூட்டமைப்பு வேண்டுகோள்!