இன்றைய இலங்கை குற்றவாளியாகவோ, பிரதிவாதியாகவோ இல்லாமல் சுதந்திரமான, சுயேச்சையான நாடாக முன்னோக்கிச் செல்வதில் எதுவித தடையும் இல்லை இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி கெட்டம்பேயில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் எந்தவொரு பிரதேசத்தையும் வெளிநாடுகளுக்கு தாரைவார்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துறைமுக நகரத் திட்டத்தின் ஒரு பகுதியை சீனாவுக்கு நிரந்தரமாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது தொடர்பான நிபந்தனைகள் பற்றி சீனாவுடன் பேசி அவற்றை நீக்கியுள்ளோம். குத்தகை அடிப்படையில் காணியை சீனாவுக்கு தற்பொழுது வழங்கியுள்ளோம்.
இவ்வாறான முன்னேற்றகரமான நடவடிக்கைகளை நாட்டின் நலன் குறித்து நாம் மேற்கொண்டுள்ள இந்த வேளையில் கண்ணாடி வீடுகளுக்குள் இருந்து கொண்டு கல் வீச வேண்டாம். 2015ஆம் ஆண்டு தாம் ஆட்சிபீடம் ஏறிய போது, வேறு நாடுகளில் இருந்து தனித்து விடப்பட்ட, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் ஆதரவை இழந்த, ஒவ்வொரு நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் பிரதிவாதியாக திகழ்ந்த நாட்டையே தாம் பொறுப்பேற்றோம்.
முன்னைய நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடிந்தமை சமகால அரசாங்கமும் மக்களும் பெற்ற பெரு வெற்றியாகும். நாட்டையும் தேசத்தையும் மீட்டெடுக்க உள்நாட்டு சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட சமூக ஜனநாயக கோட்பாட்டு கொள்கை அவசியம்.
ஏறத்தாழ சகல இராச்சியங்களும் சுதேசிய சிந்தனை மற்றும் தேசப்பற்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டை கட்டியெழுப்புகின்றன. இன்று எந்தவொரு நாட்டில் இருந்தும் இலங்கைக்கு அழுத்தங்கள் கிடையாது. எமது தாய்நாட்டிற்காக நாளை மேற்கொள்ளவேண்டிய பணிகளை இன்றே நிறைவேற்றி தேசத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.
அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி அனைவரும் இலங்கையர் என்ற உணர்வின் அடிப்படையில் செயற்பட வேண்டும். சகல இனங்கள் மத்தியிலும் சமாதானம், நம்பிக்கைம், நல்லிணக்கம் என்பன அவசியமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கை இன்று குற்றவாளியாகவோ பிரதிவாதியாகவோ இல்லை: ஜனாதிபதி