Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி, தனது 15 வயது
மகனின் சடலத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஆம்புலன்ஸ் தராததால், ஒடிசாவில், தனது மனைவியின் சடலத்தைத்
தோளில் சுமந்துசென்ற சம்பவம், நாடு முழுவதும் பெரும் வேதனையை
ஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவங்கள், மற்ற சில மாநிலங்களிலும் தொடர்ந்து
நடந்தன. இந்த நிலையில், தினசரி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவரும்,
யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில், தற்போது இதேபோன்ற ஒரு
சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி, தனது 15 வயது
மகனுக்கு காலில் ஏற்பட்ட ஒரு பிரச்னையால் அவரை எட்டவா அரசு
மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதற்கிடையே, அவரைப் பார்த்த சில
நிமிடங்களிலேயே, 'உங்களது மகன் உடலில் உயிர் இல்லை, எடுத்துச்
செல்லுங்கள்' என்று கூறிவிட்டு மருத்துவர்கள் சென்றுவிட்டனர்.மேலும்,
அவரது மகனின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்ப்பட்டு
செய்யவில்லை. இதனால், தனது 15 வயது மகனின் உடலை, தனது தோளிலேயே சுமந்தபடி
வீட்டுக்குச் சென்றுள்ளார் அந்த கூலித்தொழிலாளி.

0 Responses to யோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் இல்லையா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com