Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக எமானுவேல் மெக்ரோன் தெரிவாகியுள்ளார். இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தீவிர வலதுசாரி வேட்பாளரான மெரின் லெ பென்னை 65 % - 35% வீத வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

இதன் மூலம்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கொள்கைகள் உடைய மையவாத கட்சி வேட்பாளரான எமானுவெல் மெக்ரோன் பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதுடன், பிரான்ஸின் இளவயது (39) ஜனாதிபதி எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

எந்தவொரு நீண்டகால அரசியல் முன் அனுபவமும் இல்லாத மெக்ரோன், பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி பிரன்ஸுவாஸ் ஹாலந்தின் நிதி ஆலோசகராக அரசியலில் களம் இறங்கினார்.  அதன் பின்னர் நிதி அமைச்சராக பதவி பெற்றார். 2016 இல் அரசிலிருந்து விலகி சுயேட்சை வேட்பாளராக தான் உருவாக்கிய «En Marche» எனும் புதிய அமைப்பின் ஊடாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினார்.

இடது, வலது சாரி கட்சிகளின் போட்டியின் இடையே, இவ்விரு தெரிவுகளும் வேண்டாம். மத்தியிலேயே நிற்போம் என்பது அவரது கொள்கையாக இருந்தது. எனினும் முன்னாள் வங்கி முதலீட்டாளரான பிரன்ஸுவாஸ் மெக்ரோனின் வெற்றி, பன்னாட்டு முதலாலித்துவ நிறுவனங்களுக்கும், வலதுசாரி கொள்கைகள் உடையவர்களுக்குமான செல்வாக்கையே நிரூபிப்பதாக, இடதுசாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அகதிகள், வெளிநாட்டவர்கள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு எதிரான கொள்கைகள் உடைய தீவிர வலது சாரி வேட்பாளரான மெரின் லெ பென், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் Front National கட்சியின் தோல்வியை அடுத்து, வெளியிட்ட உத்தியோக பூர்வ அறிக்கையில், பிரான்ஸின் பிரதான எதிர்க்கட்சியாகும் அதிகாரத்தை தமது கட்சி பெற்றிருப்பதையிட்டு மகிழ்வடைகிறேன். ஆனால் தற்போதைய கட்சியை கலைத்து மீள் நிர்மாணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட தேர்தலில் சுமார் 8.2% வீத மக்கள் இரு வேட்பாளர்களுக்கும் வாக்களிக்காது தேர்தலை நிராகரித்திருந்தனர். மெரின் லெ பென் மற்றும் எமானுவேல் மெக்ரோன் இருவருமே முதலாளித்துவவாதிகளுக்கு ஆதரவாகவே செயற்படுவார்கள், நாட்டின் அடித்தட்டு, இடைநிலை தொழிலாளர் வர்க்கத்தினருக்காகவோ, அகதிகள், வெளிநாட்டவர்கள் நீதிக்காகவோ எதுவும் செய்யப் போவதில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை எமானுவேல் மெக்ரோன் நிகழ்த்திய முதலாவது உத்தியோக பூர்வ ஜனாதிபதி உரையில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலையை குறித்து கடும் அவநம்பிக்கையையும், அச்சத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்திய அனைவரினது உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் மதிக்கிறேன். பிரான்ஸில் எவருமே பாரபட்சத்தப்படுத்தப்படாது நடுநிலைத் தன்மையில் அனைத்து சேவைகளும் கிடைப்பதற்கு பாடுபடுவேன் என்றார்.

0 Responses to பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக எமானுவெல் மெக்ரோன் தெரிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com