Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் போதிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. அதனாலேயே தங்களது போராட்டம் தீர்வின்றி 75 நாட்களாக தொடர்வதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிலளிக்க வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை 75வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளதாவது, “75 நாட்களாக இரவு பகலாக காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்காக போராடி வருகின்றோம். ஆனால் எங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது எங்களால் தெரவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செயற்பட்டு வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் மஹிந்த வந்துவிடுவார் என்றும், அரசு பதில் தரும் என்றும், சர்வதேசம் உதவி செய்யும் என்றும், ஒவ்வொருவரும் ஒவ்வவொரு விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நாளைக்கு என்றாலும் பாராளுமன்றத்தை பகிஸ்கரித்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்காக கொழும்பில் ஒரு கவனயீர்ப்பு நடவடிக்கையை செய்ய முடியாத நிலையிலேயே எங்களது பிரதிநிதிகள் காணப்படுகின்றனர்.

இணக்க அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர்கள் இன்று சரணாகதி அரசியலில் ஈடுப்பட்டுள்ளனர் என்ற வலுவான சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எங்களிடம் ஒரு பேச்சும், கொழும்பில் ஒரு பேச்சும், வெளிநாடுகளில் ஒரு பேச்சும் என அவர்களது செயற்பாடுகள் தொடர்கிறது.” என்றுள்ளனர்.

0 Responses to அரசாங்கத்துக்கு தமிழ்ப் பிரதிநிதிகள் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com