இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மொனிக்கா பின்டோவினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை, இலங்கையின் இறைமைக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களினால் நிரம்பியுள்ளது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனத்தன்மை பற்றிய ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் மொனிக்கா பின்டோ, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 07ஆம் திகதி வரை இலங்கைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி இலங்கை தொடர்பாக அவர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் இலங்கை தொடர்பில் சாதகமான சில விடயங்கள் இருக்கின்றன. எனினும், இலங்கையில் தற்போது இருக்கும் நிலைமைகளை திரிபுப்படுத்தி இலங்கையின் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான விடயங்களை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவரின் அறிக்கை அரச சார்பற்ற அமைப்புகளின் அறிக்கைகளை கொண்டே தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், தனது 7 நாட்கள் விஜயத்தின் போது அரசாங்கத்தின் சில தரப்பினரை மட்டுமே சந்தித்த மொனிக்கா பின்டோவினால் இலங்கை பற்றி இப்படியானதொரு அறிக்கையை தயாரித்துள்ளார். அவரின் இந்த அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக பதிலளிக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. விசேட அறிக்கையாளர் இலங்கை தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார்: விஜயதாச ராஜபக்ஷ