தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை விடயங்களில் அதீத தலையீடுகளைச் செய்கின்றார் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபையில் தலையீடுகளைச் செய்வதையே சுமந்திரன் பிரதானமாகக் கொள்ள விரும்பினால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு, மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாண முதலமைச்சர், அவைத் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என, அனைவரது செயற்பாடுகளிலும், சுமந்திரன் அழுத்தங்களை கொடுக்கின்றார். அவருக்கு சி.வி.விக்னேஸ்வரனுடன் நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக, அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி, முதலமைச்சர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவதே பாராளுமன்ற உறுப்பினரின் தேவையாக இருக்கலாம். சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னணியில், சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபை விடயங்களில் சுமந்திரன் அதீத தலையீடுகளைச் செய்கின்றார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்