Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்…..!

”நீங்கள் முன்னால் போங்கோ. நான் பின்னால் வருவேன்“

கரும்புலியாக செல்லுகின்ற கரும்புலிவீரர்களுக்கு, தலைவர் அவர்கள் கடைசியாக இப்படிச் சொல்லித்தான் வழியனுப்பிவைப்பார்.

இது வெறுமனே அவரது வாயில் இருந்து வருகின்ற வார்த்தை அல்ல. அந்த மாபெரும் தலைவரின்ஆத்மாவில் இருந்து எழும் குரல் அது.

”உண்மையிலே என்;றோ ஒருநாள் இதுதான் நடக்கும்” என்று உறுதியோடு தன்னுள் சொல்லி நிற்பவர் எம் தலைவர். கரும்புலி
நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளச் செல்கின்ற எங்கள் தேசத்தின் குழந்தைகள் அதற்கு போவதற்கு முன்னதாக ஒரு நாளில், தலைவர் தனது பொழுதுகளை அவர்களுடன் கழிப்பார். இதனை அவர் எப்போதும் செய்வதுண்டு.

கரும்புலியாக செல்பவர்கள் தமது மனம் திறந்து பழகுவார்கள். எல்லாவற்றையும் பற்றி கதைப்பார்கள். பகிடிகள் சொல்லிச் சொல்லிச் சிரித்து மகிழ்வார்கள். தலைவரோடு ஒன்றாக இருந்து உணவருந்துவார்கள். அவரோடு சேர்ந்து நின்று படமெடுப்;பார்கள். தங்களது உள்ளக்கிடக்கைகளை எல்லாம் – உணர்வுகனை எல்லாம் பகிர்ந்து கொள்வார்கள்.

கடைசியில் தலைவரிடமிருந்து அவர்கள் விடை பெறுகின்ற போது சோகம் கலந்த பெருமிதத்தோடு அவர்களை கட்டியணைத்து வழியணுப்பி வைக்கையில், அந்தத் தலைவனின் குரல் உறுதியோடு ஒலிக்கும்.

”நீங்கள் முன்னால போங்கோ, நான் பின்னால வருவன்”

– உயிராயுததிலிருந்து …..

0 Responses to எம் தலைவரின் ஆத்மாவில் இருந்து எழும் குரல்....

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com