சர்வதேசத்தின் தொடர் எதிர்ப்புக்களையும் மீறி ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா அண்மையில் 930 Km வரை பயணம் செய்து இலக்கைத் தாக்கக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியிருந்தது.
இதனால் மிகவும் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா வடகொரியாவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்குப் போர் தான் தீர்வு எனில் அதற்கு நாம் தயார் என்றும் தேவைப் பட்டால் இராணுவத்தைப் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் என இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் இத்திட்டத்தை தெரியப் படுத்திய ஐ.நா இற்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலேய் வடகொரியாவுடன் தொடர்ந்து வலுவான வர்த்தக உறவைக் கொண்டிருக்கும் ரஷ்யாவையும் சீனாவையும் கடுமையாகச் சாடியுமுள்ளார். மேலும் ஐ.நா சபை வடகொரியா மீது விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு அமைய இவ்விரு நாடுகளும் வடகொரியாவுடன் தமது வர்த்தக உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதேவேளை செவ்வாய்க் கிழமை வடகொரியா பரிசோதித்த ஏவுகணை ஜப்பான் கடலில் சென்று வீழ்ந்ததாகவும் இது 5500 Km தூரம் வரை பயணித்து அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வரை சென்று தாக்கக் கூடியது என்றும் கூடத் தகவல் வெளியாகி இருந்தது. சுமார் 750 000 மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு வடகொரியாவின் ஏவுகணைகளால் ஏற்படக் கூடிய ஆபத்தைத் தடுத்து நிறுத்தக் கூடிய GMD என்ற பாதுகாப்புப் பொறிமுறை தம் வசம் இருப்பதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தலுக்குப் போர் தான் தீர்வு என்றால் அதற்கு நாம் தயார்! : அமெரிக்கா அதிரடி அறிவிப்பு