Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டுக்குள் இனவாதத்தைத் தூண்டி இனங்களுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ருவான் விஜயவர்த்தன மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த நாட்டில் சில இன ரீதியான குழுக்கள், இனவாதத்தைத் தூண்டி இன மோதலை உருவாக்க முயற்சிக்கின்றன. அதற்கு யாரும் துணை போகக் கூடாது என்பதுடன், இந்த நாட்டை இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு கட்டியெழுப்ப வேண்டும். அதற்காகவே இந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் சர்வதேச சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டை குழப்ப நிலைமைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தபோது, இந்த நாட்டில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. கடந்த 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மட்டக்களப்பிலும் அபிவிருத்திகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to இனவாதத்தைத் தூண்டி குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் அனுமதிக்காது: ருவான் விஜயவர்த்தன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com