பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தாரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளதோடு, அவர்களை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் உறுதியளித்துள்ளார். அத்தோடு, இப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் பலர், எந்தவிதமான வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்தோடு, பலர் தண்டனை அறிவிக்கப்படாமலேயே பல வருட காலமாக சிறைகளில் உள்ள நிலையில், சிறையில் கழித்த நாட்களை தண்டனைக் காலமாக கருதி அவர்களை விடுவிக்க வேண்டும் என்று உறவினர்களும், செயற்பாட்டு இயக்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஏனைய கைதிகளை பொதுமன்னிப்பின் பேரில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபரோடு விக்னேஸ்வரன் பேச முடிவு!