Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திண்டுக்கல்லில் உள்ள நெட்டுத் தெருவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களாகவும், தனியார் ஓப்பந்ததாரர்களிடம் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தான் தனியார் ஓப்பந்ததாரர்களிடம் துப்புரவு பணியாளராக பாலமுருகன் வேலைபார்த்து வந்தார். இன்று அதிகாலையில் வழக்கம்போல் எம்.எஸ்.பி. ஸ்கூல் அருகே பாலமுருகன் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது இரண்டு டூவீலரில் வந்த ஐந்து மர்மநபர்கள் பாலமுருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு ஓடியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் நகரின் மற்றொரு பகுதியான என்விஜிபி பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பாலமுருகனின் மாப்பிள்ளையான சரவணனையும் வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் அதே பகுதியில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சரவணின் தம்பியான வீரன் என்ற மதுரைவீரனையும் அந்த மர்மகும்பல் சராமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர். இப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று துப்புரவு தொழிலாளர்களையும் கொலை செய்தது திண்டுக்கல் நகரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு கொலை செய்யப்பட்ட மூன்று துப்புரவு தொழிலாளர்களுமே உறவினர்கள் என்பதால் இந்த படுகொலையை கேள்விபட்ட நகரில் உள்ள மற்ற துப்புரவு தொழிலாளர்களும் பதறி அடித்துக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட மூன்று சடலங்களையும் கண்டு கதறி துடித்த உறவினர்கள் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. உடனே நகர் வடக்குக்காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான காக்கிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சாலைமறியலை கைவிட செய்தனர். இப்படி நகரில் மூன்று கொலைகள் அடுத்தடுத்து நடந்ததை கண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல், டிஐஜி கார்த்திகேயன் ஆகியோர் ஸ்பாட்டுக்கு சென்று கொலை நடந்த விவரங்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்தனர். அதன் எதிரொலியாக அந்த குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட தனிப்படையை அமைத்து தேடுதல் வேட்டையில் காக்கிகள் இறங்கியுள்ளனர்.

பட்டப்பகலில் மூன்று கொலைகள் அடுத்தடுத்து நடந்ததற்கு என்ன பின்னணி என நாம் விசாரித்தபோது, கடந்த 2016 ஏப்ரல் மாதம் மாநகரின் மையப்பகுதியான கிழக்கு ரதவீதி அருகே உள்ள சர்ச் மேற்குவாசல் எதிர்புற ரோட்டில் சோமுவை ஒரு மர்மகும்பல் பட்டப்பகலில் வெட்டி சரமாரியாக கொலை செய்தனர். அந்த கொலையும் குற்றவாளிகள் 15 பேரை காக்கிகள் கைது செய்தனர். அதில் இந்த பாலமுருகன், சரவணன், வீரன் என்ற மதுரைவீரன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதற்கு பலிக்குப் பலியாகத்தான் இந்த மூன்று பேரை சோமு ஆதரவாளர்கள் கொலை செய்திருப்பார்கள் என்ற அடிப்படையில் காக்கிகள் விசாரணையை தெரியப்படுத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாநகரில் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் மூன்று கொலைகள் நடந்ததை கண்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது!

0 Responses to திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை! பின்னணி காரணம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com