அவர் பேசும்பொழுது, “கர்நாடகாவில் வசிப்போர் கட்டாயம் கன்னட மொழியை கற்க வேண்டும். கர்நாடகாவில் வசிப்பவர்கள் கன்னடர்களே. அவர்கள் குழந்தைகளுக்கும் கன்னட மொழியை கற்று கொடுக்க வேண்டும். நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல. கன்னடம் கற்கவில்லை என்றால் அது மொழியை அவமதிப்பது போலாகும். கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் கன்னடத்தினை கற்று கொடுக்க வேண்டும்.” என்றுள்ளா்ர.
முதல் மந்திரி சித்தராமையா இந்த வருட தொடக்கத்தில் கலபுரகியில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, கர்நாடகாவில் வசிக்கும் அனைத்து அரசு அதிகாரிகளும் கன்னட மொழி கற்க வேண்டும். அவர்கள் கன்னட மொழியை பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.
இதேபோன்று கடந்த ஜூனில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்கள் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், உருது அல்லது எந்த மொழி பேசுவதிலும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், கன்னட மொழியை கற்க வேண்டுமென்பது கட்டாயம் என கூறினார்.
0 Responses to கர்நாடகாவில் வசிப்போர் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும்: சித்தராமையா