எமது பூமியின் சுழற்சி வேகம் ஒரு மில்லி விநாடி குறைந்துள்ளதாக அணுக் கடிகாரங்கள் மூலம் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள் இதனால் எதிர்வரும் 2018 இல் நில நடுக்கங்கள் சற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
வாஷிங்டனில் அண்மையில் நடைபெற்ற புவியியலாளர்களின் வருடாந்த கூட்டத்தின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கொலராடோ பல்கலைக் கழக பேராசிரியர் ரோஜர் பில்ஹம் மற்றும் பென்ரிக் பல்கலைக் கழகப் பேராசிரியை ரெபேக்கா ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதில் எப்போதெல்லாம் பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதோ அப்போதெல்லாம் நிலநடுக்க வீதங்கள் அதிகரித்திருப்பதாகப் புள்ளி விபரம் கூறப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக புவியின் சுழற்சி வேகம் குறையும் போது அதன் மையத்தில் இருந்து அதிக சக்தி வெளிப்படும் எனவும் இதனால் நிலநடுக்க வீதம் அதிகரிப்பதாகவிம் கூறப்படுகின்றது. எனினும் இந்த நில அதிர்வுகள் எங்கு ஏற்படும் என்பதை சரியாகக் கணிக்க முடியாது எனவும் ஆனால் பூமத்திய ரேகையை மையமாகக் கொண்டு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு 7 ரிக்டருக்கு மேல் 6 நிலநடுக்கங்களே தோன்றியிருந்த நிலையில் அடுத்த ஆண்டு 20 நிலநடுக்கங்கள் வரை தோன்றலாம் என்று இவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதால் அடுத்த வருடம் நில அதிர்வுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு : ஆய்வில் தகவல்