அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தினை ஒழிக்க உறுதியேற்போம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டவர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். காவல் துறை உயரதிகாரிகளும் தீவிரவாதிகளின் இலக்கிற்கு பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உலகளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தினை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தினை ஒழிக்க உறுதியேற்போம்“ என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், “நம்முடைய மக்கள், நாடு, உலகம் பாதுகாப்பாக இருக்க உறுதியேற்போம்” என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to பயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்