நிர்பயாவின் தாயார் தனது மகனின் நல்வாழ்விற்காக உதவிய ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லியில், கடந்த டிசம்பர் 16ஆம் தேதி, 2012ஆம் ஆண்டு பேருந்தில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த நிர்பயா என்னும் மருத்துவ மாணவி, ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். பின்னர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், நிர்பயாவின் தம்பியின் படிப்புச் செலவுகளை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துள்ள அவரது தாயார், தனது மகன் தற்போது விமானியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது மகனின் கனவு நனவாக தொடர்ந்து தொலைபேசியின் வாயிலாக ஊக்கமளித்த ராகுல்காந்தியை நாங்கள் என்றும் நினைவில் கொள்வோம் எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

0 Responses to ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த நிர்பயாவின் தாயார்!