Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மரணம் அடைந்தார். ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதிலும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதிலும் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, சென்னை ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை தலைவராக கொண்டு ஒரு நபர் விசாரணை கமி‌ஷனாக அந்த விசாரணை ஆணையம் செயல்படும் என்று கடந்த மாதம் 25–ந் தேதி தமிழக அரசு அறிவித்தது.

அவர் சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அந்த அலுவலகத்துக்கு வந்த நீதிபதி ஆறுமுகசாமி பணிகளைத் தொடங்கினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் நவம்பர் 22–ந் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதன்படி தி.மு.கவை சேர்ந்த சரவணன் என்பவர் நீதிபதி ஆறுமுகசாமியிடம் மனு ஒன்று அளித்து உள்ளார். அதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடிகள் உள்ளன என  கூறி உள்ளார்.

மேலும் அவர் விசாரணை ஆணையத்தில்  வேறு மாநில மருத்துவக்குழுவை அமைக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் பாலாஜியின் பெயர் இல்லை. 4 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு 20 கைரேகைகள் மட்டுமே பெற வேண்டும்.ஆனால் 28 கைரேகைகள் பெறப்பட்டு உள்ளன. அப்பல்லோ செய்திக்குறிப்பிற்கும் மருத்துவ அறிக்கைக்கும் முரண்பாடுகள் அதிகம் உள்ளது என கூறி உள்ளார்.

0 Responses to ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பட்டியலில் குளறுபடி: திமுகவின் சரவணன் மனு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com