Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“2020ஆம் ஆண்டு இலங்கையின் தலைவராக யார் வருவார்?” என்கிற ஆய்வுக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஊடகப்பிரிவு நடத்திய கருத்துக் கணிப்பொன்றில், 2020ஆம் ஆண்டில் இலங்கையின் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ வருவார் என்றொரு ஆய்வு முடிவு வெளியானதாக தென்னிலங்கை ஊடகமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டிருந்ததது.

இந்த நிலையிலேயே, மேற்கண்ட ஆய்வுக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0 Responses to கோட்டாபய ராஜபக்ஷவே 2020-இல் தலைவர்?; ஆய்வுக்கு பொறுப்பேற்க கொழும்பு பல்கலை ஊடகப்பிரிவு மறுப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com